வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிகள் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு வரதமாநதி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் 11,17 ஆகிய வார்டுகளில் அமைந்துள்ள வீடுகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த 24 மின் மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. இனி வரும் நாட்களில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சோதனை செய்யப்படும். அப்போது மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவது தெரிய வந்தால் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.