Categories
மாநில செய்திகள்

வீடுகளுக்கான விற்பனை பத்திரம் மேளா… வீட்டுவசதி வாரியம் அதிரடி ஏற்பாடு…!!!!

நாளை முதல் 8ஆம் தேதி வரை அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் வீடுகளுக்கான விற்பனைப் பத்திரம் வழங்கும் மேளா  நடைபெறுகிறது.

நாளை முதல் 8ம் தேதி வரை, அனைத்து கோட்ட அலுவலகங்களிலும், வீடுகளுக்கான விற்பனை பத்திரம் வழங்கும் மேளா நடக்க உள்ளது.இது குறித்து வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுவசதி வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற பலர் முழு தொகை செலுத்தி விற்பனை பத்திரம் பெற முன்வரவில்லை.

இந்நிலையில் முழு தொகை செலுத்தி விற்பனை பத்திரம் பெறாதவர்கள் மற்றும் நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் தொகையை செலுத்தி விரைவில் பத்திரம் பெற வசதியாக விற்பனைப் பத்திரம் வழங்கும் விழா நடத்த அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டிருக்கிறார். அதனடிப்படையில் வாரியத்தின் அனைத்து கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் நாளை முதல் 8ஆம் தேதி வரை விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடக்க இருக்கிறது.

மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முழு தொகையை செலுத்திய ஒதுக்கீட்டுதாரர்கள் அனைத்து ஆவணங்களுடன் செயற் பொறியாளர் அலுவலகத்தில் விற்பனை மற்றும் சேவை மேலாளரை அணுகி விற்பனை பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |