பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் திருப்பத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இருந்து அதிக விஷம் கொண்ட நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, மலை பாம்பு போன்ற பாம்புகள் வருகிறது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் உணவு தேவைக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து வரும் பாம்புகள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கோழி, ஆடு போன்றவற்றை விழுங்கிவிடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள பாம்புகளை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.