Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

அரியலூர் மாவட்டம் தாபலுர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களிலிருந்து  வடிகாலாக மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்கு தெருவில் உள்ள சிவன் கோவில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படமால் உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் புகுந்த நீரை பாத்திரங்களைக் கொண்டு வாரி இறைத்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடும் இன்னலுக்கு உள்ளாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாத்தம்பாடி மெயின் ரோட்டில் தாபலுர் ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூர் செல்லும் சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |