தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் நம்ம குடியிருப்பு புதிய செயலியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்திட வேண்டும் என்பதற்காக நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது.