Categories
தேசிய செய்திகள்

வீடுகளுக்கே சென்று இலவசமாக செய்ய…. ஓலா நிறுவனம் தயார்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பணியை இலவசமாக செய்ய ஓலா நிறுவனம் தயார் என அதன் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். இந்த வாரம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெங்களூருவில் துவங்கப்பட்டு பின்னர் இதர நகரங்களுக்கு விரிவுபடுத்தபடும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |