Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீடுகளைச் சுற்றிலும் சூழ்ந்த மழை நீர்”…. சிரமத்திற்குள்ளாகிய பொதுமக்கள்…!!!!!

திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணி முடிவடையாத நிலையில் மழை பெய்ததன் காரணமாக பத்து தெருக்களில் வீடுகளில் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. இதனால் சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியானது பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்று 4 நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கின்றது.

இந்த நிலையில் மணலி, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து இருக்கின்றது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மழைநீர் வடிகால்வாய் பணி முடிவடையாமல் இருப்பதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வீடுகளைச் சுற்றிலும் தேங்கி நிற்கின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது பெய்த சிறிய மழைக்கே வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதற்கு காரணம் மழை நீர் வடிக்கால்வாய் பணியை முடிக்காததே. இனி வரும் நாட்களில் இதைவிட மோசமாகும். ஆகையால் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |