நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெண்களின் பாதுகாப்பான காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதை ராசிப்புரம் நகராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் சசிரேகா சதிஷ் தலைமை தாங்கினார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் தங்கம், கவுன்சிலர் ஸ்ரீவித்யா பாஸ்கர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் சுகவனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகளையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பேசிய இன்ஸ்பெக்டர் சுவனம், காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதில் பெறப்படும் பெண்கள் மீதான பாலில் துன்புறுத்தல்கள் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்த புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள அறிவுரை கூற வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதோடு அவர்கள் சிறந்தவர்களாக விளங்குவார்கள். மேலும் பாதுகாப்புக்காக வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் விழாவில் முடிவில் தொழில் அதிபர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.