Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீடுகள் மீது விழும் கற்கள்…. தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெடி வைக்கப்பட்டது. அப்போது அருகே இருந்த வீடுகள் மீது கற்கள் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இது தொடர்பாக சப் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் கடந்த சில மாதங்களாக கல்குவாரி செயல்படாமல் இருந்துள்ளது. நேற்று கல்குவாரியில் மீண்டும் பணிகள் தொடங்கியதால் கோபமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் கோபிலதா, கிராம நிர்வாக அலுவலர்கள் ரகுமான், மதுக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது, கல்குவாரியில் அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை. எந்த நேரத்திலும் வீடுகள் மீது கற்கள் வருவதால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கல்குவாரி செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே நிரந்தரமாக கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Categories

Tech |