Categories
தேசிய செய்திகள்

வீடுதேடி வரும் பாஸ்போர்ட்…. அப்ளை செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!!

வெளிநாடுகளுக்கு போக முக்கியமான ஆவணமாகவுள்ள பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பிக்கும் செயல் முறை இப்போது எளிமையான ஒன்றாக மாறி விட்டது. விண்ணப்பித்த வெறும் 7 நாட்களில் பாஸ்போர்ட் உங்களது இல்லம்தேடி வரும் அடிப்படையில் பாஸ்போர்ட் விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆன்லைன் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு, முதலாவதாக நீங்கள் https://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இத்தளத்தில் உங்களுக்கு பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். 7 நாட்களில் பாஸ்போர்ட்டை பெற விரும்பினால் நீங்கள் இங்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

ஆன்லைனில் சீக்கிரமாக பாஸ்போர்ட்டை பெற விரும்புவோருக்கு இந்த தளம் மிகவும் உதவிகரமானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும். இதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது எனில் மிக விரைவாகவே உங்களது பாஸ்போர்ட் தயாராகி விடுகிறது மற்றும் உங்களுக்கு அலைச்சலும் மிச்சமாகிறது. தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதால் ஆன்லைனில் பாஸ்போர்ட் குறித்த அணுகலுக்கு நீங்கள் அப்பாயின்ட் மென்ட் எடுக்க வேண்டும். அப்பாயின்மென்ட் பெற்றபின் உங்களது ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பிக்கவேண்டும். அவ்வாறு முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்கும் முன்பு இணையதளத்தை கவனிக்க வேண்டும். இணைய பக்கத்தை முறையாக சரிபார்த்த பின் நீங்கள் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் பைல் ஏற்கப்பட்டதும் உங்களது வீட்டில் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வெரிபிகேஷன் நடைபெறும். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் உங்கள் பாஸ்போர்ட் சரியாக 7 நாட்களுக்குள் வீடு தேடி வந்துவிடும்.

Categories

Tech |