Categories
அரசியல்

வீடுவீடாக போறோம்…. உயிரை துச்சமென நினைச்சு…. முதல்வர் பாதுகாக்கிறார்….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கான விவரங்களை நேற்று வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது,  தமிழகத்தை பொறுத்தவரை சமுகப்பரவல் இல்லை என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். முதலமைச்சர் அவர்கள் பல்வேறு பணிகளை செய்து மக்களை பாதுகாத்து வருகிறார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க,  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

மற்ற நாடுகள் படுக்கை வசதி இல்லாமல் திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா,உடல்சோர்வு,இருமல் ,சளி போன்றவை இருக்கிறதா என்று நம் களப்பணியாளர்கள் நேரில் சென்று கண்காணித்து ஒரு நாளைக்கு 550 காய்ச்சல் முகாம் நடத்தி 30,000க்கு மேலானோரை சந்தித்து அவர்களுக்கு உண்டான ஆலோசனைகளையும்,  மருந்துகளையும் வழங்கி 12,000க்கும் மேலான களப்பணியாளர்கள் சிறப்பாக  பணியாற்றி வருகின்றனர்.

முதலமைச்சர் அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளை கவனத்தில் கொண்டு அதற்காக முழு மூச்சாக இரவும் பகலும் ஒருமாதம் இரு மாதம் என பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் களத்தில் இறங்கி தங்களது உயிரை துச்சம் என நினைத்து  பொறுப்பாக செயலாற்றி தனக்கும் பாசிட்டிவ்  இருக்கும் என தெரிந்தும் களத்தில் இறங்கி 100 நாட்களுக்கு மேல் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இது மற்ற பேரிடர் போல் இல்லை… கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸின் தீவிர தாக்கம் (biological disaster)அதனால் களத்தில் இறங்கி போராடும் கள பணியாளர்களை நம் ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தொண்டை பற்றி நேர்மறையான பாராட்டுதலுக்குரிய வகையில் இருக்க வேண்டும்.

Categories

Tech |