கர்நாடக மாநிலத்தில் வீடுகள் இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி தருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் மூலமாக சிவமொக்கா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர், ” கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கட்டிக் கொடுப்பது அரசின் முதன்மை திட்டம். வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகின்றது.
வீட்டுமனை பட்டா வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் எவருக்கும் மக்கள் பணம் கொடுக்க கூடாது. அப்படி யாராவது பணம் கேட்டால் உடனடியாக கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும். இந்த முறை சிவமொக்கா மாவட்டத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது. விவசாயிகள் தங்களின் நிலத்தில் பயிரிட மக்காச்சோளம் தற்போது நல்ல விளைச்சலை அடைந்துள்ளது. மக்காச்சோளத்தை பிரித்தெடுக்கும் இயந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதற்காக ரூ.1.40 கோடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.