தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் ஏழை மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதால் மக்களிடையே இந்த ஆட்சி ஒரு நல்லாட்சியாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முதல் ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அரசின் நலத்திட்ட உதவிகளை வாங்கிய மூதாட்டிகள் புன்னகை புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதிலும் குறிப்பாக நாகர்கோவிலை சேர்ந்த வேலம்மாள் என்ற பாட்டி ஒருவர் நிவாரண உதவியை பெற்றுக்கொண்டு புன்னகைத்த புகைப்படம் இணையத்தை ஆக்ரிரமித்த புன்னகை அரசியாக மாறிவிட்டார். இது அனைவரையும் கவர்ந்தது.
இதையடுத்து இந்த பாட்டி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரூ.2000 கொடுத்த முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி, வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறேன் ஐயா. வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். இந்த பாட்டியின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.