Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம்…. “14ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால செம்பு உலோகங்கள் கண்டெடுப்பு”….!!!!!!

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்புப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே வீடு கட்டுவதற்காக முனுசாமி என்பவர் பள்ளம் தோன்றியுள்ளார். மூன்று அடிக்கு பள்ளம் தோண்டியபோது உலோகத்தால் ஆன செம்பு பாத்திரம் கிடைத்துள்ளது. ஆனால் முனுசாமியின் மனைவி சகுந்தலா யாருக்கும் தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு இதுபற்றி தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஆரணி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், போலீஸார் சகுந்தலாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி செம்பு பாத்திரத்தை பறிமுதல் செய்தார்கள். அதில் 23 கால் சலங்கைகளும் காப்பு வடிவிலான 10 துண்டுகளும் இருந்தது. இது 14ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என சொல்லப்படுகின்றது.

இதையடுத்து அவற்றை போலீசார் ஆட்சியரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் மீண்டும் பழைய உலோகப் பொருட்கள் அந்தப் பகுதியில் கிடைக்குமா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பூமிக்கு அடியில் கிடைக்கப்பட்ட பொருட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உள்ள நிலையில் மறைத்து வைத்திருந்த முனுசாமி மற்றும் அவரின் மனைவி சகுந்தலாவிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |