புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விராலிமலை பகுதியில் இருக்கும் சக்தி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் நேற்று காலை விராலிமலை கடைவீதியில் இருக்கும் பகுதியில் 3 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு முருகேசன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.