வீடு கட்டுவதில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே இருக்கும் பாப்பாடியை அடுத்துள்ள தச்சாங்காட்டூர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மனைவி வள்ளி. இருவரும் கூலி தொழிலாளர்களாக இருந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் மாரிமுத்து புதிய வீடு ஒன்றை கட்ட தொடங்கிய போது, வீடு கட்டுவதில் அதிகம் செலவு ஏற்படுவதாக மனைவியிடம் கூறி மணிகண்டன் தகராறு செய்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்து மாரிமுத்து வள்ளியை கடப்பாரையால் தாக்கியும் அறிவாளால் வெட்டியும் கொலை செய்திருக்கின்றார்.
இதையடுத்து வந்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்த நிலையில் சேலம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்ததில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.