Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடு கட்ட கடன் கிடைக்கும்”…. 7 3/4 லட்சத்தை இழந்த கட்டிட மேஸ்திரி…. போலீஸ் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வீடு கட்ட 18 லட்ச ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, நில பத்திரத்தின் நகல் ஆகியவற்றை அனுப்புவதோடு, முன்பணமாக 7,86,000 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய விஜயகுமார் ஒரு வங்கி கணக்கிற்கு 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை பல்வேறு தவணைகளாக அனுப்பியுள்ளார். மூன்று மாதங்கள் ஆகியும் கடன் தொகை கிடைக்கவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |