Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட சூப்பர் வாய்ப்பு…. கம்மி வட்டியில் இனி லோன் வாங்கலாம்….. இதோ முழு விவரம்…..!!!!

இந்தியாவில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அண்மையில் தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளும் வட்டியை உயர்த்தியது. அதிலும் குறிப்பாக வீட்டு கடன் வட்டி அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு, EMi உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்குவது நல்லது.

ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் பல்வேறு வங்கிகளில் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக முன்னணி வங்கிகளின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இருபது வருட காலவரம்பில் 75 லட்சம் வரையில் வீட்டு கடன் வாங்கினால் 8% வரை வட்டி விகிதம் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்தபட்ச வட்டி உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  1. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் – 7.15%
  2. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – 7.2%
  3. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 7.3%
  4. பஞ்சாப் நேஷனல் பேங்க் – 7.4%
  5. பேங்க் ஆஃப் பரோடா – 7.45%
  6. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 7.55%
  7. LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் – 7.5%

Categories

Tech |