இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சலுகை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
எனவே வீடு வாங்குவதற்கும், வீடு கட்டவும் நினைப்பவர்கள் இது மிக நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த சலுகையை பெற நினைப்பவர்கள் 72893314 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் ஜீரோ பிரசஸிங்க் கட்டணத்தில் வீட்டுக்கடனை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.