தர்மபுரி மாவட்ட மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ராமச்சந்திரன்(65) – சின்னராஜி(60). இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகனும், சுமதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி மெக்கானிக்கல் வேலை செய்து வருகிறார். சுமதி தன்னுடைய கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் -சின்னராஜ் தம்பதிகள் தங்களுடைய சொந்த நிலத்தை பாதியாக பிரித்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மகள் சுமதி பெற்றோர் கொடுத்த அந்த நிலத்தில் வீடு கட்டியுள்ளார். மேலும் ராமசாமியும் அதற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் வீடு கட்ட பணம் தருமாறு தன்னுடைய பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.
இந் நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வந்த ராமசாமி தன்னுடைய தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் அருகில் கிடந்த கம்பியால் தலையில் பலமாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். இதை தடுக்க வந்த அவருடைய தந்தை ராமச்சந்திரனையும் கம்பியால் அடித்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ராமசாமிகாவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் . இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.