மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் சிகிச்சைக்காக தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, “கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தேவேந்திர பட்னாவிஸ் வீடு திரும்பியுள்ளார். அவர் தன்னை மேலும் சில நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.