Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடு திரும்பினார் விஜயகாந்த்…!!!

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தொற்று குணமடைந்து இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.இதற்கிடையே விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என மீடியாக்கள் வதந்திகளைப் பரப்பின.இதற்கு மறுப்பு தெரிவித்த தேமுதிக தலைமை  விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என அறிவிப்பினை வெளியிட்டது. சென்னை மியாட் மருத்துவமனையும் விஜயகாந்த் நலமுடன் உள்ளாரெனவும் அவர் மேல்சிகிச்சைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் விளக்கம் அளித்தது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

Categories

Tech |