பேங்க் ஆப் பரோடா வங்கி அக்டோபர் 22-ஆம் தேதி முதல் மெகா ஆன்லைன் ஏலத்தை நடத்த உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அக்டோபர் 22-ஆம் தேதி மெகா ஆன்லைன் ஏலம் தொடங்குகிறது. இதில் மிகக் குறைந்த விலையில் வீடுகள், நிலம் மற்றும் வர்த்தக சொத்துக்கள் ஆகியவற்றை மார்க்கெட் விலையைவிட குறைந்த விலையில் வாங்கலாம். சொத்து வாங்குவதற்கு எளிய நிபந்தனைகளுடன் கடன் வாங்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.bankofbaroda.in/e-auction என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று பார்க்கவும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் வீடு மற்றும் நிலம் உள்ளிட்ட சொத்து வாங்க விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Categories