சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் முன்விரோதம் காரணமாக மின்வாரிய அதிகாரி, மகள், மனைவி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராமலிங்கம் நகரில் மின்பொறியாளர் செல்வம் வசித்து வருகிறார். இவருடைய எதிர்வீட்டில் வசித்து வரும் சங்கரலிங்கம் என்பவர் மத்திய பாதுகாப்பு படையில் நாகலாந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த சங்கரலிங்கத்திற்கும், செல்வத்துக்கும் கடை வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி செல்வம் வீட்டிற்கு சென்ற சிலர் அவரையும், அவர் மகள் லோகேஸ்வரி, மனைவி சத்யா ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சங்கரலிங்கம், அவரது மகள் பிரவீனா, மனைவி காளியம்மாள் மற்றும் உதையாச்சி செல்லம் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.