Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடு புகுந்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்”…. போலீஸ் வலைவீச்சு….!!!!!

அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி ருபிஸ்டன் மீன்பிடிக்க அதிகாலை 05.00 மணிக்கு கடலுக்கு சென்று இருக்கின்றார். இதையடுத்து 05. 20 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென அவரின் வீட்டிற்குள் புகுந்து படுக்கையறையில் இருந்த ஸ்மைலாவின் முகம் மற்றும் தொடையில் கத்தியால் குத்தியிருக்கின்றார்.

பின் அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, பீரோவில் இருந்த தங்க நகைகள் 15 1/4 பவன் மற்றும் மூவாயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டிலிருந்து  மர்ம நபர் தப்பி ஓடி உள்ளார். பின் கூச்சலிட்டு இருக்கின்றார். இதையடுத்து சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இதை தொடர்ந்து போலீசார் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |