வீடு புகுந்து தங்க காசு, நகை திருடிய இரண்டு பேருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்பொழுது நாளுக்குநாள் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த குற்ற சம்பவங்கள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வீடு புகுந்து பட்ட பகலில் குற்ற சம்பளங்கள் நடந்து வருகின்றது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் கோனேரிப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்த செந்தமிழரசு என்பவரின் வீட்டில் சென்ற 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12 பவுன் தங்க காசு, நகைகள் உள்ளிட்டவை திருட்டுப் போனது.
இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மற்றும் சதீஷ் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தார்கள். இந்த வழக்கானது ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று 2 பேருக்கும் தலா 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.