வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம் வட்டம் பிரம்மதேசம் அருகிலுள்ள ஆத்தூர் கூட்டுரோட்டில் வசித்து வருபவர் சுபேதா(33). இவர் கணவர் இறந்து விட்ட நிலையில் சுபேதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபேதா உறவினர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சுபேதா நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் நகை ரூபாய் 18 ஆயிரம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுபேதா பிரம்மதேசம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இக்குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.