அமெரிக்காவில் வீடு புகுந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் தொல்லை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஹெர்னாண்டிஸ் கார்சியா ( 59 வயது). இவர் கடந்த அக்டோபர் மாதம் கிளிப்டன் மற்றும் பேஸிக் கவுண்டில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்து சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிமன்றம் இதற்கு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் போது அவரால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் பெற்றோர் ஜூம் அழைப்பின் மூலம் ஆஜராகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், 10 ஆண்டுகளுக்கு பரோலில் வெளியில் வரத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.