Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து சிறுமியை கட்டிங் பிளேடால் தாக்கிய நபர்…. என்ன காரணம் தெரியுமா?…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

வீடு புகுந்து மாணவியை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் 10-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிறுமி   தனியாக இருந்து படித்துள்ளார். அப்போது  திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சிறுமியின் தலயில்  கட்டிங் பிளேடால்   சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி  இரத்த வெள்ளத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நடந்துவற்றை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி  விட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |