Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து வாலிபர் வெட்டி கொலை…. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி கரிசல்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பூமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் நுழைந்து பூமிநாதன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பூமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் கூறியதாவது, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடந்த 2021-ஆம் ஆண்டு கொலை செய்தது. அதில் பூமிநாதன் நான்காவது குற்றவாளியாக இருந்துள்ளார். எனவே பழிக்கு பழியாக கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. எனவே பிரவீனின் கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் பூமிநாதனை கொலை செய்த நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |