Categories
அரசியல்

வீடு வாங்குவோருக்கு…. இதுவே கடைசி வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

2021 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சட்டம் 80EEA இந்தியாவில் வீடு வாங்குவதற்கான வரி சலுகையை நீட்டிக்க பட்டிருந்தது. அதாவது 2002 மார்ச் 31ம் தேதி வரையில் வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக்கடனில் ஒன்றரை லட்சம் வரையில் வரி சலுகையை பெற முடியும். இந்த காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. அதற்குள் வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீடு வாங்கும்போது அந்த வீட்டின் விலை ரூபாய் 45 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்கு வருமான வரிச் சலுகையை ஒன்றரை லட்சம் வரை கேட்கலாம். வீட்டுக் கடன் வட்டியை செலுத்துவதில் இச்சலுகை கிடைக்கும். 2021 மத்திய பட்ஜெட் இதற்கான அறிவிப்பு இருந்த நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2022 மத்திய பட்ஜெட்டில் இச்சலுகை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பு வெளியாகாததால்  வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே 2022 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வீடு வாங்குபவர்கள் இனி அதிகமாக வருமான வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

வீடு வாங்குவோருக்கு இன்னும் மூன்று வாரங்கள் கால கெடு உள்ளது. அதற்குள் புதிய வீட்டிற்கான ஒப்புதலை பெற்று விட்டால் ரூபாய் 1.5 லட்சம் வரையில் வரிச்சலுகையை பெற முடியும். மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒப்புதல் பெற்று அதை தாண்டி வீடு வாங்கினாலும் இச்சலுகையை பெற முடியும். அதற்குள் வேலையை முடித்தால் மிகவும் நல்லது புதிதாக வீட்டை வாங்குபவர் அதற்கான கடனுக்கு ஒப்புதல் பெறும் போது அவர்களது பெயரில் ஏதேனும் ஒரு வீடு இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் இந்த சலுகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |