இத்தாலியில் ஒரு அழகான நகரத்தில் 100 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யும் திட்டத்தை அந்நகரத்தின் மேயர் அறிமுகம் செய்துள்ளார்.
நீங்கள் இத்தாலியில் வீடு வாங்குவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு.நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அது மிகவும் பழைய வீடுகள். அதனை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். இந்த வீடுகள் புக்லியாவின் தென்கிழக்கு பகுதியில் பிக்காரி என்ற பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நகரின் மேயர் இந்த வீடுகளை ஒரு சிறப்பு திட்டத்தின் கீழ் விற்பனை செய்து வருகிறார். அந்நகரில் உள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால நகரின் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த வீடுகள் மிகப் பழமையான வீடுகள் என்பதால் (ஒரு யூரோ) 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். அதனால் நகரம் முழுவதும் காலியாக உள்ளது. ஒரு காலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 2000 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். எனவே அங்கு வீடு வாங்க விரும்புவோர் மேயரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம். வீடு விற்பனைக்கு மொத்தம் இரண்டு திட்டங்களை மேலே தயார் செய்துள்ளார்.
முதல் திட்டத்தில் வீடுகளின் விலை ஒரு யூரோ. இரண்டாவது திட்டம் மிகவும் மலிவானது. இந்த வீட்டை வாங்க விரும்புவோர் 3000 யூரோக்களை திறவாத தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் வீடு பழுதுபார்க்கும் பணிகளை செய்த பிறகு இந்த தொகை அவர்களுக்கு திருப்பி தரப்படும். இது ஒரு அழகான நகரம். இங்கிருந்து அழகான நதி மற்றும் மலைத் தொடர்களை காண முடியும். எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் நீங்கள் வீடு வாங்கிக் கொள்ளலாம்.