சொந்த வீடு என்பது அனைவருக்குமே மிகப்பெரிய கனவு. சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள் அதை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். சிலர் சொந்தமாக வீட்டையே வாங்கிவிடுவார்கள். புதிதாக வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவது சுலபம் தான். ஏனென்றால் வங்கிகளில் இப்போது சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள்.
ஆனால் இனிவரும் நாட்களில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தில் வீடுகளின் விலை 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இடையே வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்த விலை ஏற்றம் இருக்கும் என்று கூறுகிறது. சிமெண்ட் விலை உயர்வு போன்ற காரணங்களாலும் வீடு விலை உயர வாய்ப்புள்ளது.
வீடுகளின் விலை அதிகரித்தாலும் வீடு விற்பனை அதிகமாகவே இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் இடையே தேவை குறையாது எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்தியா முழுவதும் வீடுகளின் விலை 6 சதவீதம் உயர்ந்தது. கொரோனா காரணமாக நிதி நெருக்கடி இருந்தாலும் ரியல் எஸ்டேட் துறையில் இருந்த மந்த நிலை காரணமாகவும் வீடு விற்பனையும் வீடுகளின் விலையும் குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் வீடுகளின் விலை 8 சதவீதம் வரை அதிகரிக்கும். அதனைப்போலவே வீடுகளில் விற்பனையும் 12 சதவீதம் உயரும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியைப் வீடு வாங்க திட்டமிட்டு இருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.