இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மக்கள் வீடு வாங்குவது போன்ற பெரிய அளவிலான செலவுகளை குறைத்துள்ளனர். மேலும் வேலையின்மை, சம்பள உயர்வு போன்ற பிரச்சினைகளும் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை உயரும் என ஆய்வு ஒன்றின் வழியாக தெரியவந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆண்டில் வீரர்களுக்கான விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 13 சொத்து ஆலோசனை நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் அடுத்த ஆண்டிலும் வீடுகளின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சென்ற 2022ஆம் ஆண்டு வீடுகளின் விலை சராசரியாக 2.5 சதவீதம் அதிகரித்திருந்தன. அதேபோல் 2022ஆம் ஆண்டில் 3.75 சதவீதம்தான் உயர்வு இருந்தது.
ஆனால் அடுத்த ஆண்டிலும் வீடுகளின் விலை இன்னும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. இது வீடு வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டிலும் விலை அதிகரிக்கும் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் வீடுகளின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.