ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து உள்ள காரணத்தினால் வீடு கடன் வாங்குவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.
சென்ற மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்து இருந்தது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் என தெரிவித்தது. அதேபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீததிலேயே வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தப்பட்டு 4.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ரெப்போ வட்டி விகித உயர்வை தொடர்ந்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. மேலும் வீடு வாங்குபவர்களுக்கு ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது பெரும் சுமையை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட் துறையினர் ஏற்கனவே பணவீக்க பிரச்சினையில் சிக்கியுள்ளனர். சிமெண்ட் முதல் பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து உள்ளது. இதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்ந்த காரணத்தினால் வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான இஎம்ஐ அதிரடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.