விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெருவில் வசிப்பவர் அன்னம்மாள்(61). இவர் யாரும் இல்லாமல் தனியாகத்தான் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ள சண்முகத்தாய் (37) என்பவர் வாடகைக்கு வீடு பார்ப்பது போல வந்துள்ளார். அப்போது வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்ட அந்த பெண் அன்னம்மாளிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அன்னம்மாள் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சண்முகத்தாயை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.