Categories
அரசியல் திருச்சி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வீடு வீடாகச் போகணும் சரியா… தேர்தல் வருது தயாரா இருங்க…. அமமுக ஆலோசனை …!!

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து, பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் ஆலோசனைக்‍ கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்குடியில் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில பொருளாளர் சமயபுரம் திரு. ராமு, லால்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. முடியரசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் அரச மலையில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. எம்.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், மாவட்ட செயலாளர் திரு. க.சிவசண்முகம் பங்கேற்று, குக்கர் சின்னத்தை பொதுமக்‍களிடம் கொண்டு செல்லுவது குறித்தும், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது குறித்தும் கழக நிர்வாகிகளுக்‍கு ஆலோசனை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நாகை தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், தெற்குப் பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மாற்று கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட கழக செயலாளர் திரு. RCM மஞ்சுளா சந்திரமோகன் முன்னிலையில் அ.ம.மு.க-வில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் திரு. காளிதாசன், நாகை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Categories

Tech |