Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடு வீடாக கிருமிநாசினி…. கொரோனா பாடல் பாடி விழிப்புணர்வு…. 68 வயதிலும் தொடரும் சேவை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என்றாலும், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றையும் மக்கள் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் பன்னீர்செல்வம்(68). இவர் விவசாய சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். பொது சேவை செய்வதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மஞ்சள் பொடி, துளசி பொடி, வேப்பிலை சாறு கொண்ட கிருமி நாசினியை தயார் செய்து அங்குள்ள கிராமங்களில் வீடுவீடாகச் சென்று தினமும் தெளித்து வருகிறார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து பாடல்களையும் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மக்களுடைய பாதுகாப்பிற்காக நான் செலவு செய்கிறேன். இந்த பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். கடந்த வருடமும் இதே போல கிருமி நாசினி தெளித்து. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் இவருடைய நல்லெண்ணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |