Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீடு வீடாக சென்று… காய்ச்சல் பரிசோதனை… தடுப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் நகராட்சியில் 4-வது வார்டு உட்பட்ட காதிபோர்டு காலனி, என்.ஜி.ஓ காலனி, ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் உத்தரவின்படி நேற்று தூய்மைப் பணியாளர்கள், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து அந்த பகுதி முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாமக்கல்லில் பல பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதனால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |