பெரியநாயக்கன்பாளையம் சின்னதடாகம் பகுதியில், சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன் பாளைய ஒன்றியத்தில் நேற்று 9 ஊராட்சி, 4 பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாமையொட்டி 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, அதில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று அவர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆரம்பித்துள்ளனர். வருகின்ற காலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியானது இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர் .