தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி. இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன் என நடிகை ஐஸ்வர்யா கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சினிமாவில் இப்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வீடு வீடாகச் சோப்பு விற்கிறேன். இதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன். ஆனால் என் பொருளாதாரத்தில் மாற்றம் தேவை. அதற்கு ஒரு சீரியல் போதும். எனக்கு சோறு போட்டது சீரியல்தான் சினிமா இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக செல்வேன் என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.