அதிமுக அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று சொல்லுங்கள் என அதிமுக திட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் பட்டியல் போட்டு சொன்னார்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவுடைய பொற்கால ஆட்சியில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியை பெரும் பகுதியை ஒதுக்கி…. ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதை நல்ஆட்சியாளர்கள் நிறைவாக நாட்டு மக்களுக்குத் தரவேண்டும். நல்ல ஆட்சியாளராக மாண்புமிகு அம்மா இருந்த காரணத்தினால் உண்ண உணவாக 20 கிலோ அரிசி தந்தார்கள், உடுக்க உடை தந்தார்கள், குடியிருக்க வீடு தந்தார்கள்.
கிட்டத்தட்ட தமிழகத்தில் 12 இலட்சம் மக்கள் ஏழை எளிய மக்கள்… வீடற்ற மக்களாக குடிசை பகுதியில் வாழ்கின்ற மக்கள் கணக்கெடுக்கப்பட்டு மாண்புமிகு அம்மாவுடைய ஆட்சியில் கிட்டத்தட்ட 6 லட்சம் வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. ஏழை பெண்கள் திருமண வயது எட்டுகின்றபோது ஏழ்மையின் காரணமாக திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் திருமண நிதி உதவி திட்டத்தை தாய் உள்ளதோடு அறிவித்தார்கள்.
திருமண நிதி உதவியாக 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம் அந்த பெண் படித்து பட்டதாரியாக இருந்தால் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வேண்டும் என்று திருமண நிதி உதவியை 50,000 ஆக உயர்த்திய தாயின் ஆட்சியில் தான் தமிழகத்திலே நடைபெற்றது என்பது வரலாறு. தமிழகத்தில் இருக்கின்ற மாணவச் செல்வங்களே அரசின் மூலமாக படிக்கவைத்து, அவருக்கு வேண்டிய 16 வகையான கல்வி உபகரணங்களை கையில் தந்து, படிக்க வைத்தால் அந்த பட்டம் பெற்ற மாணவன் நம் மாநிலத்திலோ அல்லது பிற மாநிலங்களிலோ சென்று வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டால்,
அந்த மாணவனை சார்ந்து இருக்கின்ற குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய அடிப்படை அமையும் என்று மாண்புமிகு அம்மா தாயுள்ளதுடன் செய்த காரணத்தினால் தமிழகத்தின் நிதியில் மூன்றில் ஒரு பங்கு நிதியை 33 ஆயிரம் கோடி ரூபாய்யாக கல்வித்துறைக்காக மட்டும் ஒதுக்கி மாண்புமிகு அம்மா எடுத்த நல்லபல நடவடிக்கையின் காரணமாக இந்தியாவில் தேசிய சராசரி… படித்த பட்டதாரிகளின் சதவிகிதம் 24% என்று இருக்க, தமிழகத்தினுடைய படித்த பட்டதாரிகளின் சதவீதம் 52 ஆக உயர்ந்திருக்கிறது என்று சொன்னால்… அது இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா கல்வித் துறைக்கு ஆற்றிய சேவைகள்.
எண்ணற்ற கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம், விவசாய கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ இப்படி கல்வி சாலைகளை திறந்து வைத்தன் காரணம் இன்றைக்கு நம்முடைய மாணவச் செல்வங்கள் அனைத்து குடும்பங்களிலும் பட்டதாரிகளாக உருவாகி, நல்ல நிலையில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இருந்தார்கள்…. மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்.
ஒரு மாநிலம் அனைத்து நிலைகளிலும்…. அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்று சொன்னால் சட்டம்-ஒழுங்கு அரசின் மூலமாக காப்பாற்றப்பட்டு, அந்த மாநிலம் அமைதி தரும் என்ற மாநிலமாக இருக்க வேண்டும் அதைத்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உறுதி செய்தார்கள். தமிழகத்தில் எந்த பகுதியிலும் சாதி சண்டைகள் இல்லை, மதக்கலவரங்கள் இல்லை, தமிழகம் அமைதிப் பூங்கா மாநிலமாக இருந்தது.
தமிழகத்தை பத்தாண்டு காலம் மாண்புமிகு அம்மா அவர்கள் மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக ஆட்சி செய்தார்கள். அதற்கு முன்னால் திமுக ஆட்சியில் 2006- 11இல் 5 ஆண்டுகள் முழுமையாக மின்சாரம் தட்டுப்பாடு தினம் தினம் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. மின்சாரம் தட்டுப்பாடு நீங்கி மிகை மின் மாநிலமாக உருவாகி தமிழ்நாட்டை அம்மா அவர்கள் உருவாக்கிஇருந்தார்கள். இதையெல்லாம் நாம் இந்த ஊராட்சி தேர்தலில் வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும்.
மாண்புமிகு அம்மா அவர்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்களை வீடு வீடாக செல்லுங்கள். சாதனை எடுத்துச்சொல்லுங்கள். திமுக இந்த நான்கு ஐந்து மாத காலங்களில் அவர்கள் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அலங்கோலங்களையும் எடுத்துச் சொல்லுங்கள் என ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டார்.