Categories
தேசிய செய்திகள்

வீடு வீடா போய் எல்லாருக்கும் டெஸ்ட்…. பெங்களூரு மாநகராட்சி அதிரடி…!!!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கு மாநில அரசுகள் இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. அதன்படி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக நேரடியாக வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்களிடமிருந்து பயத்தை போக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்த மாநகராட்சி முயற்சி செய்து வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |