கோவா மீன் கறி செய்ய தேவையான பொருள்கள்:
சதைப் பற்றுள்ள மீன் – அரை கிலோ
வெங்காயம் – 3
பூண்டு – ஆறு இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் – 4 மல்லி விதை ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் மூன்று டீஸ்பூன்
மல்லி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – மூன்று
தேங்காய்ப்பால் – அரை கப்
புளி விழுது – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப சீரகம் – 2
செய்முறை:
மீனைக் கழுவி சுத்தம் செய்து, 2 அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மல்லி விதை, சீரகம், காய்ந்த மிளகாயை நன்றாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்ருடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டைப் போட்டு வதக்கவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றரை நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள். பின்பு மீன் துண்டுகளைப் போட்டு, 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக அதனுடன் தேங்காய்ப் பால், புளி இவற்றைச் சேர்த்து, 1 நிமிடம் வைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் எடுத்து நன்றாக கலக்கி பரிமாறவும்.