Categories
உலக செய்திகள்

வீட்டினுள் திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… உள்ளே சென்று பார்த்த போலீஸார்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

கனடாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் இருக்கின்ற ஒரு வீட்டில் நேற்று முன்தினம் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரு பெண் உட்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு யாரால் நடத்தப்பட்டது? துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் என்ன? என்ற தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாதிகளால் நடத்தப்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

Categories

Tech |