லாரியை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டையில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியை வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து முருகன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரமேஷ் மற்றும் செல்வம் ஆகிய 2 பேரும் லாரியை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரமேஷ் மற்றும் செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து லாரியை மீட்டனர்.