வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் வீட்டின் கதவின் இடுக்கில் இருந்து வெளியே வந்த பாம்பு தன்னை படம் எடுப்பதை பார்த்து, பதிலுக்கு படம் எடுத்து மிரட்டி அவரை தாக்க முயன்று உள்ளது. நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப் பாம்புகள் தனது கழுத்துப்பகுதியை விரிய கூடிய தசை கொண்டிருக்கும். தங்களை தாக்கும் போது தற்காப்புக்காக கழுத்தை விரித்து தலையை தூக்கி படமெடுத்து ஆடும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.