ஒரு வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கிளிமனூர் பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் 3 காவலர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவலர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் வீட்டில் உரிமையாளரை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவலர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு 3 காவலர்களின் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் நான் புகார் அளித்த உடனே காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உடனடியாக புகாரை வாபஸ் பெற்று சமாதானம் ஆகும்படி தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னை அசிங்கப்படுத்திய 3 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை நான் ஓயமாட்டேன் எனவும் உரிமையாளர் கூறியுள்ளார்.