மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமயனூர் ஓம்சக்தி நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சோமயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த ரங்கராஜை திடீரென மின்னல் தாக்கியது.
இதில் உடல் கருகிய ரங்கராஜை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரங்கராஜை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.