Categories
ஆன்மிகம் இந்து

வீட்டின் பூஜை அறையில் செய்யவேண்டிய முறை மற்றும் அதன் சிறப்பு..!!

நம் வீட்டில் பூஜை அறையில் சில முறைகளை தெளிவாக செய்யவேண்டும். அவரை முறைகள் மற்றும் அதன் சிறப்புகள்..!

அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய்  உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது.

செவ்வாய்,  வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம்  பூசுங்கள். இதனால வீட்டுக்குள் தீய சக்தியும் வராது, விஷப்பூச்சிகள் எதுவுமே வராது.

சனி பகவானுக்கு வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. நம்ம வீட்டு பூஜை அறையில் கடவுளை வணங்கும் பொழுது முடிந்த அளவிற்கு தரையில் அமர்ந்தபடியே வணங்குவது ரொம்பவே நல்லது.

விளக்கேற்றும் பொழுது தூங்க கூடாது:

அது மட்டுமில்லை நம் வீட்டில் யாராவது தூங்கி கொண்டு இருந்தார்கள் என்றால் அந்த நேரத்தில் நாம்  விளக்கேற்றவே கூடாது. அதிகாலையிலும், மாலையிலும் சரி யாருமே தூங்கக்கூடாது விளக்கு ஏற்றும் பொழுது. தூங்கி எழுந்த பிறகு விளக்கு ஏற்றினால் போதும். பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அது இரண்டு துண்டாக உடையாமல் மூன்று, நான்கு துண்டுகளாக உடைந்தால், அந்த தேங்காய் சாமிக்கு நிவேதனமாக வைக்க கூடாது.

வாடிய மலர்கள்:

நிர்மால்யம் என்றால் பூஜைக்கு முன்னாடி நாம் கடவுளுக்கு போட்ட வாடிய பூக்களை தான் குறிக்கும். அதாவது இந்த வாடிய பூக்களை ஒரு தட்டில் அல்லது  ஒரு கூடையில் போட்டு வைக்க வேண்டும். இந்த வாடிய பூக்களை அடுத்தவர்களின் கால்பட்ட இடத்திலேயோ அல்லது குப்பையிலும் போடாமல் ஓடுகின்ற  தண்ணீரில் போடுவதுரொம்ப நல்லது.

வெண்ணெய் உருக்க கூடாது:

செவ்வாய்க்கிழமையும் ,வெள்ளிக்கிழமையும் வீட்டில் வெண்ணெய் உருக்கக் கூடாது. இதற்கு என்ன காரணம் என்றால் செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையும் லட்சுமிக்கு உகந்தநாள். வெண்ணெயில் மகாலட்சுமி இருப்பதால் இந்த இரண்டு நாட்களிலும் வெண்ணெய் உருக்கக் கூடாது.

வெற்றிலை, பாக்கு எவ்வாறு வைக்கவேண்டும்:

பூஜை அறையில் கடவுளுக்கு வெற்றிலை, பாக்கு வைக்கும் பொழுது, நிறைய பேர் கொட்டபாக்கு வைக்காமல், பாக்கெட்டில் இருக்கும் பாக்கு வைக்கிறார்கள். ஆனால் எப்பொழுதும் அவ்வாறு செய்யவே கூடாது. வெற்றிலையும், கொட்டைப் பாக்கும் தான் வைக்கவேண்டும்.

வெற்றிலை எந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டுமென்றால், இரட்டைப் படை எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். இரண்டு, நான்கு, ஆறு, எட்டு இதுபோல எண்ணிக்கையில் தான் நாம் வைக்கவேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் வைக்கணும். 4,2 என்ற எண்ணிக்கையில் தான் எப்பொழுதும் பூஜை அறையில் வெற்றிலை பாக்கு வைக்கவேண்டும்.

பூஜை அறையில் வெற்றிலை, பாக்கு எப்படி வைக்க வேண்டும். வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறமாகவும், வெற்றிலை உடைய காம்புப் பகுதி கடவுளுக்கு வலதுபுறமாகவும் இருக்கிற மாதிரி வையுங்கள்.

கடவுளுக்கு பூ எவ்வாறு போடவேண்டும்:

அதன் பிறகு நம் வீட்டில் பூஜை செய்யும்பொழுது சாமி படத்துக்கு எல்லாம் நிறைய பூக்கள் போட்டு அலங்காரம் படுத்துவோம். ஒரு சிலர் என்ன பண்ணுவாங்க  நிறைய அலங்காரம் பண்ணனும், நல்லா பண்ண வேண்டும் என்று சாமி முகமே தெரியாத அளவுக்கு பூவைப் போட்டு மறைத்து வைத்து இருப்பார்கள்.

அதுபோலவே எக்காரணத்தை கொண்டும் நாம் பண்ணவே கூடாது, கடவுளுடைய பாதமும், முகமும் மறைக்காத அளவிற்கு பூ போட்டு அலங்காரம் பண்ண வேண்டும். தீப ஒளி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வங்கள் நிறைந்து இருப்பார்கள்.

இனி எப்பவும் உங்களோட வீட்டில் காலையிலும், மாலையிலும் தீபமேற்றி வழிபட பழகிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம ஏற்றி வைத்திருக்கும் விளக்கிலிருந்து கற்பூரத்தையும், ஊதுபத்தியும் பற்ற வைப்பீர்கள் அல்லவா அதுபோலவே எக்காரணத்தை கொண்டும் செய்யக் கூடாது.

கோவிலில் விளக்கேற்றும் பொழுது செய்யக்கூடாதவை:

நாம் கோவிலில் விளக்கேற்றும் பொழுது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி கொண்டு பூய் விளக்கு ஈற்றுங்கள். அதுவே மற்றவர்கள் விளக்கேற்றி  வைத்திருந்தால் அந்த விளக்கு அணைந்து இருந்தால் அந்த விளக்கை நீங்கள் ஏற்றி வைக்கலாம்.அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

விளக்கேற்ற உகந்த நேரம்:

வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எந்த நேரம் உகந்த நேரம் என்று பார்த்தீர்கள் என்றால், காலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் தீபம் ஏற்றுவது ரொம்ப நல்லது. மாலை நேரத்தில் 5 முப்பது மணி முதல் 6 மணிக்குள் தீபம் ஏற்றுவது ரொம்ப நல்லது. பூஜையறையில் எக்காரணத்தைக் கொண்டும் எவர்சில்வர் விளக்கு வைத்து நீங்கள் விளக்கேற்றவே கூடாது.

வெள்ளி விளக்கு , பித்தளை விளக்கு ஏற்றலாம் அப்படி இல்லை என்றால் அகல் விளக்கு ஏற்றுவதும் ரொம்பவே நல்லது.

Categories

Tech |